இப்படி ஒரு கோழை தேசமாக நாம் இருக்கக்கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

0
154

அரசாங்கத்தை கைப்பற்றி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண தயார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“உலகில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசுகளும் ஆட்சியாளர்களும் பதவி விலகுகிறார்கள். எனவே கோத்தபாய ராஜபக்ச இப்போது பதவி விலக வேண்டும், ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று கூறுகிறோம்.


சரி, நாங்கள் சிறிது காலத்திற்கு கூட அரசாங்கத்தை கைப்பற்ற தயாராக இருக்கிறோம். இந்த பாராளுமன்றத்தில் இருந்து எமக்கு விருப்பமான அமைச்சரவையை தெரிவு செய்ய அனுமதித்தால் இந்த பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சினையை குறுகிய காலத்திற்குள் தீர்த்து பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுப்போம்.

அனைத்து வர்ணக் கட்சிகளையும் விட்டுவிட்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மக்கள் இயக்கம் என்ற ஒரே மக்கள் இயக்கத்தை உருவாக்க அனைவரையும் அழைக்கிறோம். மக்கள் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் வரை இந்த ஊழல், நாசகார மக்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடங்கப்பட வேண்டும். இப்படி ஒரு கோழை தேசமாக நாம் இருக்கக்கூடாது. நீங்கள் வசிக்கும் சிறு கிராமங்களில் மக்களை வீதிக்கு அழைத்துச் செல்ல தயாராகுங்கள். இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க நாடு முழுவதும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தும் நாளை அறிவிப்போம்.”

கடந்த 28ஆம் திகதி மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here