தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு 7,500 முதல் 10,000 ரூபா வரையில் நிதி ஒதுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.