கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு : களத்தில் இராணுவம்

0
152

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

119 பொலிஸ் அவசர இலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கண்டி நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தற்போது அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு இந்த தகவலை வழங்கியவர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here