தென்மேற்கு பருவக்காற்று செயற்படுவதன் காரணமாக புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். .
அப்பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5-3.5 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக புத்தளம், கொழும்பு, காலி வரை கடல் அலைகள் கரையை வந்தடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.