கேஸ் விலையில் அதிரடி மாற்றம்

0
97

நாளை (ஜூலை 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் (LP) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க Litro Gas Lanka தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எல்பி எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 3,000 என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்பி எரிவாயு சிலிண்டர்களின் நான்காவது விலை குறைப்பு இதுவாகும்.

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும், எதிர்காலத்தில் விலை திருத்தம் செய்யப்படலாம் என்று சமீபத்தில் அறிவித்தது. ஆனால் இந்த விஷயம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here