எரிமலையின் மேல் அமர்ந்து டென்னிஸ் பந்துகளை விளையாடுகிறோம் – விமல்

Date:

தேர்தலில் தோல்வியடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரதமரின் அரசாங்கத்தினால் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிடுகின்றார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை எனவும் நாட்டில் குறைந்த பட்சம் ஜனாதிபதியாவது இருக்கிறாரா என்பது பாரிய பிரச்சினை

இருந்த போதிலும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து விவாதிக்காமல் முன்னர் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அர்த்தமில்லை என்றம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிடுகின்றார்.

பாராளுமன்ற வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்கும் கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய ஆட்சியொன்றை ஏற்படுத்துவதே முதலில் செய்யப்பட வேண்டும் எனவும் திரு.விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார். அதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே சிறந்த தீர்வாக அமையும் எனவும், நாடாளுமன்றத்தில் இருதரப்பு விவாதங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாம் செய்வது எரிமலையின் மேல் நின்று டென்னிஸ் பந்துகளை அடிப்பது போன்ற மிகவும் ஆபத்தான விளையாட்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...