நியமனக் கடிதங்களை வழங்கி வைத்த வடக்கு மாகாண ஆளுநர்!

0
122

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (03) வழங்கிவைத்தார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) அ.யோ.எழிலரசியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here