ரயில் சேவையை இழக்கும் அபாயம்

0
136

பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் மக்கள் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்து வழியான ரயில் சேவையை இழக்கும் அபாயம் உள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தினசரி 48 அலுவலக ரயில் பயணங்களில் 26 பயணங்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று 22 பயணங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ரயில் இயக்கப்படாததால் பல பயணிகள் சிரமத்திற்கு ஆளானதோடு, சில பயணிகள் ரயில் பெட்டிகளின் ஃபுட்போர்டுகள் மட்டுமின்றி இன்ஜின்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here