தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0
159

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு நேற்று கொழும்பு – டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு சென்றி தயாசிறி ஜயசேகரவை அங்கு நுழையவிடாமல் தடுக்கும் வகையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தைப் பூட்டியிருந்ததுடன், அவருக்கு இடையூறும் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அவர்குறித்த முறைப்பாடை பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here