குருந்துவத்தையில் இடம்பெற்ற மோதலின் போது 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெளிப் பிரதேசங்களில் இருந்து குருந்துவத்தை பொலிஸ் எல்லைக்கு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.