திருடர்களின் சதி முறியடிக்கப்படும் – சஜித் சூளுரை

Date:

அரசமைப்பில் உள்ள ஓட்டைகள் ஊடாக பதவியைத் தக்கவைத்துக்கொள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று (07) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதைத் தற்போதைய ஜனாதிபதியின் சீடர்கள் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை என்பது கிடையாது.

அவர் திருடர்களைப் பாதுகாக்கும் பணிகளையே முன்னெடுத்துள்ளார்.

சிலருக்கு அதிகாரம் இல்லாமல் உறக்கம் வருவதில்லை.

அவ்வாறானவர்கள் பல சதிகளை முன்னெடுத்து ஆட்சியைத் தக்க வைக்க முயல்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அவ்வாறான எந்தத் தேவையும் இல்லை.

எமக்குத் திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் – வாங்கலும் இல்லை.

மக்களின் சக்தியே எமது பலம். திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...