ஊரடங்குச் சட்டத்தை புறக்கணித்து நாளை கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் போராட்டத்தை வெற்றிபெற மக்கள் தலையீடு செய்ய வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே குறிப்பிடுகின்றார்.
தலைமறைவான இடத்தில் இருந்து நாளைய தினம் பதவி விலக வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
“அரசாங்க முறையை கவிழ்த்து விடுங்கள்” என்ற தலைப்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சங்கம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்பு நோக்கி பேரணியாக சென்றதுடன், கோட்டை ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலான உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். .
எனினும், தற்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று இரவு உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது