இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகிறார்

0
57

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா (Vinay Mohan Kwatra) அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய வௌிவிவகார செயலாளர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here