எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்ற இணக்கம்

0
156

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்ற கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

நிபந்தனையற்ற உடன்படிக்கையின் கீழ் அதனை செய்வதற்கு இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தாக்கல் செய்த வழக்கின் ஆவணங்களை கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகளிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி, உரிய ஆவணங்களை வரும் 14ம் திகதி வழங்க வேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகையை கட்டுப்படுத்தி லண்டன் நீதிமன்றம் விதித்த உத்தரவை அமல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தினால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் பிரதிநிதிகள் வரும் 17ஆம் திகதி சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here