அதுருகிரி துப்பாக்கிச் சூட்டின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோத துப்பாக்கி எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.
மேலும் குற்றவாளிகள் மறைந்திருக்க முடியாது எனவும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றமும் வெளிநாட்டில் இருந்து நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மாதங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.