சஜித் ஜனாதிபதி! தீர்மானம் நிறைவேற்றியது

0
336

இன்று (11) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்து ஏகமனதாக உறுதிப்படுத்தியது.

இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் கொண்டுவரப்பட்டதுடன், அதனை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தினார்.

இந்த தீர்மானம் முழு சபையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம் தற்போது கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here