பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு – ஒப்பந்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

0
142

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சு ஆகியவற்றுடன் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்துடனும் நேற்று (10) உடன்பாடு எட்டப்பட்டது.

பணமோசடி அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல் போன்ற பொலிஸாரினால் நடத்தப்படும் விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எட்டுவதே இதன் நோக்கமாகும்.

இதன் மூலம் நீண்டகாலமாக பொலிஸ் விசாரணைகளுக்கான தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் குறைவதோடு, சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் நல்ல அனுபவமுள்ள அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்துவதன் மூலம் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here