மக்கள் ஆணையை பெறாதவர்கள் எதனை வேண்டுமானாலும் கோரலாம் மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அந்த ஆணைக்கு மாறாக செயல்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயார் செய்யும் கடிதம் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் சிபாரிசை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மீண்டும் ஏற்க மறுப்பதனால் அக் கடிதத்தில் இரா.சம்பந்தன் ஒப்பமிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மறுப்பு தெரிவித்தமை தொடர்பிலேயே இரா.சம்பந்தன் மேலும் கூறியதாவது,
தமிழர்களின் இனப் பிரச்சினை விடயத்தில் 13 தீர்வல்ல. அதனையும் தாண்டிய சமஸ்டி அடிப்படையிலான தீர்வே தமிழர்களின் அபிலாசையாகவும் அதற்கே மக்கள் ஆணை வழங்கியதனால் அதனையே நாம் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். வெறுமனே 13ஐ மட்டும் கோரி நிற்க முடியாது என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கடிதத்தில் திருத்தம் செய்து அனுப்ப கோரியதாகவும் அதனை ஏற்க கூட்டணி மறுத்ததாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.