நாட்டின் பிரதான வீதி அமைப்பில் விரிவாக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்தப் பாலங்களை விரிவுபடுத்த 15.3 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் குறிப்பிட்டார்.
மேலும், 135 பாழடைந்த பாலங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றை புனரமைப்பதற்கு 12.3 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
பாலம் புனரமைப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒதுக்கீடுகள் கிடைத்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சர்தா வீரகோன் தெரிவித்தார்.
அண்மையில் பொலன்னறுவை – மானம்பிட்டிய கொட்டாலேய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஓடையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பாலம் குறுகலாக உள்ளதால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது தெரியவந்தது.
இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.