சீன பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு யாழ் சுழிபுரம் கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு

0
36

”சீனாவின் உதவி திட்டங்கள் கடற்றொழிலாளர்களின் மனநிலையை அறியாது முன்னெடுக்கப்படுவதாக” யாழ் சுழிபுரம் திருவடிநிலை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் செல்லன் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் ”மக்களுக்கு ஏற்ற திட்டங்களை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் சீன பொருத்து வீட்டுத் திட்டத்தினால் அமைக்கப்படும் வீடுகள் கடற்கரை காற்று மற்றும் உவர் நீரினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதனாலேயே தமது பிரதேசத்தவர்கள் இத் திட்டத்தை முற்றுமுழுதாக எதிர்ப்பதாகவும் செல்லன் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here