97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்று (14) கோல்பேஸ் போராட்ட மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் போதே போராட்டக்காரர்கள் சார்பில் ஜிவந்த பீரிஸ் இதனை அறிவித்தார்.
இலங்கை மக்களுக்கு செய்த அநியாயங்களுக்கு உரிய தண்டனையை ஜனாதிபதி இன்று பெற்றுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவது குறித்து இந்த தருணத்தில் அறிவிக்கப்படும் எனவும் இரண்டாவது கோரிக்கையான ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.