நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை இருவரும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு கோத்தபாய, மகிந்த, பசில் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களே காரணம் என்பதால், அவர்களுக்கு எதிரான விசாரணைகளை தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு பயணத்தடையை பிறப்பிக்குமாறு அண்மையில் பிரேரணை ஒன்று கோரப்பட்டதுடன், அந்த பிரேரணையும் இன்று பரிசீலிக்கப்பட்டது.
