ராஜபக்ஷா்களின் இனவாத ஆட்சிக்கு இனியும் இடமில்லை!

Date:

இனவாதத்தை முதலீடாக பயன்படுத்தி ஆட்சி நடத்திய ராஜபக்ஸக்கள் மற்றும் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச வர்த்தகப் பிரமுகர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்றும், எமது மக்கள் காலம் காலமாக தொடர்ந்து நாட்டையும், நாட்டு மக்களையும் அழித்து வருபவர்களுக்கே வாக்குகளை வழங்கி வந்திருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இனவாதிகளும், ஊழல்வாதிகளும், இந்நாட்டை ஆண்டதால் தான் நாட்டில் இனவாதம் மேலோங்கி பொருளாதாரம் சீரழிந்து அனைத்து விதத்திலும் நாடு பின்னடைந்து காணப்படுவதாகவும், இனவாதத்தை முதலீடாக பயன்படுத்தி ஆட்சி நடத்திய ராஜபக்ஸக்கள் உள்ளிட்ட எவராலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சஜித் தரப்பினர் பகலில் ரணி விக்கிரமசிங்கவுடன் ஊடல் செய்து இரவில் கூடல் செய்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க என்ன முடிச்சுகளை போட்டாலும் அடுத்த இரண்டரை மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தேயாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...