பென்ஸில் வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்பின் இந்த கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம், அவரின் மெய்பாதுகாவளர்களினால் மேடையில் இருந்து இடைநடுவில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்களில் ஒருவர் அந்தநாட்டு பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பிபிசி செய்தி வௌியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்ைககள் சூடுபிடித்துள்ளன. இதன் ஒரு கட்டமாகவே, பென்ஸில்வேனியாவின் பட்லர் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ட்ரம் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில், ட்ரம் மீதான தாக்குதலுக்கு குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்களும், ஜனநாயக கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை எனவும், இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக அனைவரும் ஒரு தேசமாக ஒன்றுபட வேண்டுமென ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமெரிக்க ஜனாதிபதியுமான ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய அரச அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.