சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணக்கம் காணும் நபரை பிரதமர் பதவிக்கு முன்மொழியுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
அதற்கு தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் .ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதாலேயே இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.