ஏராளமான புத்தகங்களை தன்னகத்தே கொண்ட சிங்கப்பூர் மத்திய பொது நூலகத்திற்கு ஆசியாவிலேயே மிகச் சிறந்த தானியங்கு நூலக செயலி அமைப்பை பார்வையிட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயம் செய்தார்.
உலகளவில் ஏராளமான புத்தக வாசகர்கள் உள்ளதுடன் மேம்பட்ட தேடுபொறிகள் மூலம் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில் எந்தத் தரவையும் சில நொடிகளில் பெறக்கூடிய வசதிகள் பற்றி மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக ஆளுநர் தெரிவித்தார்.
கட்டப்பட்டு வரும் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இது விரைவில் இலங்கையின் மிகப்பெரிய நூலகமாக மாறும்.
சிங்கப்பூர் மத்திய பொது நூலகத்திலிருந்து மட்டக்களப்புக்கான பொது நூலகத்திற்கு புத்தகங்களை பெறுவது தொடர்பான தனது வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.