“பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு வீதியில்” – யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம்

Date:

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தேங்காய் உடைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று இதன்போது வேலையில்லாப் பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு வீதியில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, படிப்புக்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா?, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததற்குக் கூலித் தொழிலா கடைசி வரைக்கும்?, படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா?, படித்தும் பரதேசிகளாகத் திரிவதா?” எனப் பல்வேறுபட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...