முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, 03 மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (17) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மனுதாரர்கள் தலா 50,000 ரூபா ரொக்கப்பிணை, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.