“இலங்கை அரச சேவை ஒன்றும் நசீர் அஹமட்டின் வாப்பா வீட்டு சொத்து அல்ல”

Date:

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதற்கு இலங்கை அரச சேவை ஒன்றும் அமைச்சர் நசீர் அஹமட்டின் வாப்பா வீட்டு சொத்து அல்ல என அரச சேவை முன்னாள் பிரபல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நசீர் அஹமட் அவ்வாறு கருத்து வெளியிடுவது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரச அதிகாரிகளின் கோபத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளதென பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த முன்னாள் அரச அதிகாரி எமது இணையத்திடம் தெரிவித்தார்.

எதிர்கட்சி சார்பில் (ஐக்கிய மக்கள் சக்தி) பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான நசீர் அஹமட் அமைச்சு பதவி எனும் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் உணர்வுமிக்க ஆதரவாளர்களையும் காட்டிக் கொடுத்து அரசாங்கத்தின் காலடியில் விழுந்து கேவலமான பிழைப்பு நடத்துவது போல் அரச அதிகாரிகள் செயற்படுவதில்லை என குறித்த அரச அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் நசீர் அஹமட்டால் காத்தான்குடியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அரச அதிகாரிகள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கிழக்கில் தான் வைப்பது தான் சட்டம் எனவும், கல்வி செயலாளர் திஸாநாயக்கவை இரவோடு இரவாக தூக்குவதாகவும், அவரை வீதிக்கு இறங்க விடாமல் செய்வதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நசீர் அஹமட் தனது எல்லையை மீறி வெளியிட்ட இவ்வாறான கருத்துக்கள் சிங்கள முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகவும், அவர் தனது அரசியலை தக்க வைத்து கொள்ள இவ்வாறு கருத்து வெளியிட்டமைக்கு எதிராக அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளதுடன், தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நசீர் அஹமட் தொடர்பில் உயர் மட்டத்தில் முறையிட உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரச ஊழியர்களை இணைத்து கொண்டு பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் பிரபல அரச ஊழியர்கள் தொழிற்சங்க முக்கியஸ்தர் எமது இணையத்திடம் தெரிவித்தார்.

நசீர் அஹமட் வெளியிட்ட அநாகரீக கருத்தின் வீடியோ ஆதாரம் இதோ…

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...