ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம்

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜூலை 17ம் திகதி தேர்தலை அறிவிக்கும் நிலையில் தான் இருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் செப்டம்பர் 17ம் திகதி அதாவது அதிகாரம் வழங்கப்பட்ட முதல்நாள் அன்று நான் தேர்தலிற்கான அறிவிப்பை வழங்கியிருந்தால் செப்டம்பர் 17 ம் திகதி தேர்தலை நடத்தியிருக்கவேண்டும், அன்றைய தினம் போயா என்பதால் அது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கலாச்சார காரணங்களிற்காக தேர்தலை போயா தினத்தன்று நடத்த முடியாது என தெரிவித்துள்ள அவர் மறுநாள் அதனை நடத்துவது சாத்தியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்..

இதன்காரணமாக வேட்புமனுதாக்கல் செய்யும் தினத்தை அடுத்தவாரம் அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை அடுத்தவாரம் அறிவிக்கவுள்ளதாக எனஅவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...