GOOD DAY என்பது ஒரு சமூகத் திரைப்படம் என்பதைக் குறிப்பிடுவதோடு தொடங்குவதே சரியானது. ஒரே இரவில் நிகழும் சம்பவங்கள் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடுகின்றன என்பதையே இப்படம் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரை மையமாகக் கொண்டு, பிரித்விராஜ் ராமலிங்கம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் என். அரவிந்தன் திறமையாக இயக்கியுள்ளார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மனதில் பதியும் உணர்ச்சிகளுடன் காட்சிகளை உயிர்ப்பித்துள்ளது.

படத்தின் கதை, பணப்பற்றாக்குறையும் வேலை மன அழுத்தமும் காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. ஆனால், அந்த முடிவு இறுதியல்ல; வாழ்க்கை தரும் சந்தர்ப்பங்கள் எப்போதும் மாற்றங்களை கொண்டுவந்துவிடும் என்பதையே இப்படம் வலியுறுத்துகிறது.
கதை சொல்லும் விதம், “மன அழுத்தம் வரும் போதே எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் சரியானவை அல்ல” என்பதைக் கண்ணியமாக எடுத்துரைக்கிறது. அதோடு சமூகத்தில் பரவலாகக் காணப்படும் மது பழக்கம் எவ்வாறு மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்கிறது என்பதையும் படம் சுவாரஸ்யமான முறையில் வெளிப்படுத்துகிறது.


படம் முழுவதும் மதுபானத்தின் பாதிப்பை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு தொடர்ந்து காட்சியளிக்கிறது.
பிரித்விராஜ் ராமலிங்கம் அவர்களின் நடிப்பு உணர்ச்சிகளை இயல்பாகக் கொண்டுள்ளது. காளி வெங்கட், மைனா நந்தினி மற்றும் பிற நடிகர்களும் கதையில் சிறப்பாகப் பொருந்தியுள்ளனர். குறிப்பாக, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள விஜய் முருகன் அவர்களின் நடிப்பு படத்திற்கு வித்தியாசமான வண்ணம் சேர்த்துள்ளது. இவர் ஏற்கனவே பல படங்களில் கலை இயக்குநராகவும் சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்தவர்.
திரைக்கதை மனித உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இயக்குநர் அரவிந்தன் தனது அனுபவங்களை முழுமையாகப் பயன்படுத்தி இந்தக் கதையை மனதைத் தொடும் வகையில் செதுக்கி உள்ளார்.
கோவிந்த் வசந்தாவின் இசை சிறப்பாக அமைய, பின்னணி இசை காட்சிகளை மேலும் உயிர்ப்பிக்கிறது.

GOOD DAY என்பது வாழ்க்கையின் சிக்கல்களையும், மனித உறவுகளின் நம்பிக்கையையும் அழகாக வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி மிக்க படமாகும்.
பிரமாண்ட பிரிமியர் விழா – கொழும்பில் வித்தியாசமான கொண்டாட்டம்
இந்தப் படம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் ONE GALLE FACE – PVR சினிமாஸ்-ல் நடைபெற்ற பிரத்தியேக பிரிமியர் நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வை இலங்கையில் SucceZ Creation நிறுவனம் சிறப்பாக ஒருங்கிணைத்தது.
இந்த பிரமாண்ட நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய திரை மற்றும் தொலைக்காட்சி உலகின் பிரபலங்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். குறிப்பாக, புகழ்பெற்ற கவிஞரும் முன்னணி பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் அவர்கள் இந்த நிகழ்வின் பிரதான முகமாக செயல்பட்டு, பல முக்கிய பிரபலங்களை நேரடியாக அழைத்து அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தினார். அவருடைய tireless முயற்சியும் சிறப்பான ஒத்துழைப்பும் நிகழ்வின் கண்ணோட்டத்தை உயர்த்தியதோடு, விழாவிற்கு தனித்துவமான பெருமையை வழங்கியது.
பிரிமியர் நிகழ்வு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தை பார்த்த அனைவரும் ‘GOOD DAY’ குறித்து மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இப்படம் இலங்கையில் வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
உங்கள் குடும்பத்துடன் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய படம் இது.
இப்படத்தை இலங்கையில் வெளியிடுவதற்கான பெரும் முயற்சியை எடுத்த Sangavi Films நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்.
இலங்கை திரையிடல் விபரம்

இர்ஷாத் ரஹுமத்துல்லா (இலங்கை)
https://youtu.be/ErCduev7PTw?si=qECGEmdFXDjo7LGf