இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் .பசில் ராஜபக்ச பிரதமராக வருவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது திடீரென நடக்காது, படிப்படியாக நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே உள்ளது. தற்போது முழு அரசாங்கக் கட்சிப் பொறிமுறையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் .பசில் ராஜபக்ஷ தலைமையில் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கும் தேர்தல் பிரசாரமும் பசில் ராஜபக்ஷவினால் நிர்வகிப்பதுடன் டலஸ் – சஜித் இணைந்து போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்புடன் பலரிடையே பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பசில் பின்வாங்கவில்லை.