பல்கலைக்கழக பிக்குகள் சங்கத்தால் கொழும்பு வார்ட் பிளேஸ் அருகில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு பின்னர், பொலிஸார் நீர்த்தாக்குதல் நடத்தி கலைக்கச் சென்றனர்.
பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் உள்ளிட்ட சாக்ஷித்ரிய பாடத்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேராதனை, களனி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்தும் வகையிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சொய்சா சுற்றுவட்டத்திலிருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் நுழைய முற்பட்டதை தடுக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.











