பங்களாதேஷில் வன்முறை; ஊரடங்கு;பல்கலைக்கழகங்களில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள்!

0
46

பங்களாதேசில் வன்முறைகள் அச்சம்தரும் அளவிற்கு அதிகரித்துள்ள சூழ்நிலையில் இலங்கையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளனர்.

பங்களாதேசில் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இணைய தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டாக்காவிலும் சிட்டகொங்கிலும் பல்கலைகழகங்களில் சிக்குண்டுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரும் கடிதங்களை இலங்கை மாணவர்கள் கல்விகற்க்கும் பல்கலைகழகங்களிற்கு பங்களாதேசிற்கான இலங்கைதூதுவர் தர்மபால வீரக்கொடி அனுப்பிவைத்துள்ளார்.

தூதுவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தொடர்பிலிருக்கின்றார் என வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here