உடப்பு காளி சிலையில் தங்க கண்களை நோண்டிய கோவில் பணியாளர் கைது

0
202

உடப்பு காளி கோவிலில் உள்ள காளி சிலையில் தங்கத்தில் பதிக்கப்பட்ட இரு கண்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேகநபரை  கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டிற்குள் செயற்பட்ட போது, ​​அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்களிடமிருந்து கும்பூ தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று அவர் இந்த தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தேங்காய் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் எனவும், சீசன் காலங்களில் ஆலயங்களில் மேளம் அடிப்பவர் எனவும், ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களின் போது வேல் பூட்டி கயிற்றில் தொங்கி ஊர்வலம் செல்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here