தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சிக்குள் முக்கோணப் போர் உருவாகியுள்ளது.
அக்கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா, தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி கமகே, எஸ்.அமரசிங்க ஆகியோர் எம்.பி பதவியை பெற முயற்சித்து வருகின்றனர்.
பல்வேறு நபர்கள் ஊடாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.