ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21இல்?

0
46

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 அல்லது 28ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் 16 முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் ஜனாதிபதித் தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை கருத்தில் கொண்டு அது தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை இந்த வாரத்திற்குள் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும், பின்னர் ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 28 முதல் 42 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் கட்டாயமாக சனிக்கிழமை நாளொன்றில் நடத்தப்படும் எனவும், அதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் அது தொடர்பான தபால் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here