அஸ்வெசும அழுத்தம் காரணமாக கைவிடப்படுமா?

Date:

அரசாங்கத்தின் முன்னணி திட்டமான அஸ்வெசும மானியத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட இந்தக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இக்கடிதத்தை வழங்க நடவடிக்கை எடுத்த எம்.பி.ஜகத்குமார் சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் போன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு கையொப்பமிட்டுள்ளதுடன் சுமார் எழுபது கையொப்பங்களைப் பெற்று ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்பட உள்ளது.

அரசின் முன்னணித் திட்டமான அஸ்வெசுமா மானியத் திட்டத்தில் உண்மையான குறைந்த வருமானம் பெறுபவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படாததில் கடும் சிக்கல் இருப்பதாக அந்தக் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...