கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்வது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
சுசில் பிரேமஜயந்த அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மேலும் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா நியமனம் தொடர்பாக கலந்துரையாடியதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


