மூன்று நாள் பயணமாக மீண்டும் வடக்கு வருகின்றார் ரணில்

Date:

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துடன் பல சந்திப்புக்களும், 3 ஆம் திகதி  கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று 4 ஆம் திகதி  முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட கலந்துரையாடலுடன் காணி உறுதி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...