சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னர் கொழும்பு குற்றப்பிரிவினால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் நாடாளுமன்ற வீதிக்கு அருகில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொலிஸ் தலைமையகத்திற்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானமாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்கபுஷ்பிகா கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.