தேயிலை கொழுந்தின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேயிலை தூள் 100 முதல் 130 ரூபாய் வரை விலை போனதாக அவர் கூறினார்.
ஆனால் ஒரு கிலோகிராம் பச்சை தேயிலையின் விலை 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாவுக்கு நிகரான டொலரின் விலை அதிகரிப்பினால் தேயிலை விவசாயிகள் நன்மையடைந்துள்ளதாக தலைவர் தெரிவித்தார்.