புதிய கூட்டணி ஆதரவு யாருக்கு?

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பதை நாளை மறுநாள் (31ஆம் திகதி) வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை எனவும், தற்போது சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியொன்று காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவார். அதை 31ம் திகதி நாடு முழுவதும் அறிவிப்போம். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தற்போது வேட்பாளரை முன்வைக்க முடியாது. ஏனெனில் எமது கட்சியின் முன்னாள் தலைவர் இந்தக் கட்சியை அழித்தார்.

எனவே, நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய தொலைநோக்கு பார்வையும் அனுபவமும் கொண்ட வேட்பாளராக நாடால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவினால் தீர்மானிக்கப்படுகிறது. நாங்கள் தனி நபர்களாக முடிவுகளை எடுப்பதில்லை. நாங்கள் கட்சி என்ற ரீதியில் முடிவுகளை எடுக்கிறோம்,” என்றார் அமைச்சர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...