நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசுவது நாட்டுக்கு தேவையற்ற விடயம்

0
143

இலங்கையில் அண்மைய நாட்களில் அதிகளவான கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தக் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வ கட்சி அரசாங்கத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசுவது நாட்டுக்கு தேவையற்ற விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஒருங்கிணைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

நாடு சரியான பாதையில் செல்வதற்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here