உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
கிழக்கு மாகாண சபையின் கீழ் சில புதிய நலன்புரி திட்டங்கள் இதன்போது பிரதமர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.