அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜூலை 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.