எனது வீடுகள் எரிக்கப்பட்டமை, அத்துகோரள எம்.பி தனது உயிரை தியாகம் செய்ய நேர்ந்தமை அனைத்துக்கும் எம்.பி நாமல் ராஜபக்க்ஷ உள்ளிட்டோரின் தவறான செயற்பாடுகளே காரணம் என எஸ்.எம்.சந்திரசேன கூறுகிறார்.
நாமல் ராஜபக்க்ஷவுக்கு வரலாறு தெரியாது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராக இருந்தபோது, மஹிந்த ராஜபக்க்ஷவின் பெயரை நான்தான் முதலில் பரிந்துரைத்தேன்.
அப்போது நான் மிகவும் சிரமப்பட்டேன், ஜனாதிபதி மாளிகைக்கு வந்ததற்காக சந்திரிகா என்னைத் திட்டினார்.
ஷெஹான் சேமசிங்க மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை நல்லது என நாமல் ராஜபக்க்ஷ கூறுவதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.
இவர்களின் தவறான செயல்களால் தான் இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திக்க நேரிட்டது. நாமல் ராஜபக்க்ஷவின் தவறான செயற்பாடுகள் காரணமாகவே அத்துகோரள போன்றவர்கள் அன்றைய தினம் உயிர்த் தியாகம் செய்ய நேரிட்டது. போராட்ட தினத்தில் கூட்டங்களை நாங்கள் நடத்தியமை காரணமாகவே அந்த நிலைக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.
அநுராதபுரம் மாவட்டத்தில் எனது வெற்றிடத்தை நாமல் ராஜபக்க்ஷவால் நிரப்ப முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.