அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை எனவும், அதற்கு வெளியில் சென்று இலக்குகளை வென்றெடுப்பதற்காக போராட வேண்டும் எனவும் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதை செய்ய வேண்டும் என்றும், அப்போது அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் உயிர் தியாகம் செய்தவர்களை மாவீரர்களாக கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.
போராளிகளை சுட்டுக் கொன்றால் 20-25 பேர் இறக்கலாம் போராட்டம் நிற்காது சர்வதேச தலையீடுகள் வான்வழியாக வந்து இராணுவத்தை தாக்கி தலைமையகத்தைக்கூட அழித்துவிடலாம் என மத்திய கிழக்கு நாடுகளின் உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார்.
எனவே, அவ்வாறான உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என மீண்டும் இராணுவத்தினரிடம் வலியுறுத்துவதாகவும், அரசியலமைப்பை இராணுவம் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்குள் பல்வேறு குழுக்கள் இருப்பதாகவும், பணம் பெறும் குழுக்கள் இருப்பதாகவும், இரவில் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு காலையில் போராட்ட களத்தில் இருக்கும் குழுக்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.
இணைய சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்