நாமல் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளர் இலங்கை மின்சார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கடிதம் உள்ளது.
இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் கடிதத்தின் பிரகாரம் மின்கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என கடித்த்தில் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறான விலைபட்டியல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அது யாருடைய பெயரில், எந்தத் திகதியில் எந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறும், சரியான தகவல்களை அதில் வழங்குமாறும், குறித்த கடிதத்தில் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் கோரியுள்ளார்.