வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. இன்று செலுத்தினார்.
சுயாதீன வேட்பாளராகவே அவர் போட்டியிடவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 10 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது